...

பெரியபுராண வாயில்

By: பேராசிரியர் சாமி தியாகராஜன்

120
Available Stock: 15

பெரியபுராண வாயில்

ஆசிரியர்: பேராசிரியர் சாமி தியாகராஜன்

பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ. மோகன்

              தொண்டர்தம் பெருமையை பறைசாற்றக்கூடிய அற்புதமான நூல் சேக்கிழார் பெருமான் இயற்றிய பெரிய புராணம். "மானுடம் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமாக உயர்ந்தது" பற்றி குறிப்பிடக் கூடிய நூல் இது. தன்மையால் பெரிய புராணம். பயன்பாட்டால் பெரிய புராணம். செயற்கரிய செய்வார் பெரியவர் என்னும் இலக்கணத்தால் பெரியபுராணம். பெரிய புராணத்தை தமிழகத்தின் தேசிய காப்பியம் என குறிப்பிடுவார் சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் அறிஞர் அ.ச.ஞானசம்பந்தனார் அவர்கள்.

              பெரிய புராணத்திற்கு இதுவரை எழுந்துள்ள உரைகளை எல்லாம் ஆராய்ந்து இந்நூலை வழங்கி இருக்கிறார் பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்கள். "ஈர அன்பினர் யாது குறைவிலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ?" என்னும் தொடருக்கு இந்நூலாசிரியர் நாயன்மாருடைய வரலாறுகளை எடுத்துக்காட்டி வீரமிக்கவர்களாக நாயன்மார்கள் இருந்தார்கள் என்பதை புலப்படுத்துகிறார். அதை போலவே அன்பில் சிறந்தவர்களாக நாயன்மார்கள் இருந்து எம்பெருமானின் திருவடியை அடைந்த நிலை, செய்த குற்றத்திற்கான தண்டனை தரப்பட வேண்டும் என்னும் நீதியை பெரியபுராணம் நிலைநாட்டும் விதம் என ஒவ்வொன்றும் நாயன்மார்கள் வழி புலப்படுவதை பெரிய புராண வாயில் எடுத்துக்கூறுகிறது. செம்பதிப்புச் செம்மல் சிவாலயம் ஜெ.மோகன் அவர்கள் வெளியிட்டு தொண்டர் திருக்கூட்டத்தின் தொண்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

Related products

...
திருக்குறள் மூலமும் சரவணப் பெருமாளையருரையும்
Price: Rs. 1,100

By: உரையாசிரியர் : சரவணப் பெருமாள் ஐயர்

...
திருவாசக விரிவுரை
Price: Rs. 280

By: உரையாசிரியர் : மறைமலையடிகள்

...
திருக்குறள் மூலமும் உரையும்
Price: Rs. 1,100

By: உரையாசிரியர் : களத்தூர் வேதகிரி முதலியார்

...
திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை
Price: Rs. 350

By: நூலாசிரியர்: மறைமலை அடிகளார் உரையாசிரியர்: அழகரடிகள்