By: தவத்திரு ஊரன் அடிகள்
சேக்கிழாரும் வள்ளலாரும்
ஆசிரியர்: தவத்திரு ஊரன் அடிகள்
பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ.மோகன்
தவத்திரு அடிகளாரின் வாழையடி வாழை ஒப்பாய்வு வரிசையில் இது 12-வது நூலாகும். மெய்ஞான செல்வர்களாகிய 63 அடியார்களின் சரிதையை சேக்கிழார் பெருமான் "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெயரில் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடி அருளினார்.சன்மார்க்க தேசிகர், ஒளிநெறிப் பிழம்பு, தயாசாகரர் என்றெல்லாம் சைவ சன்மார்க்க உலகம் கொண்டாடும் நம் தவத்திரு ஊரன் அடிகளார் சேக்கிழார் பற்றிய ஓர் ஆய்வை அருமையாகச் செய்திருக்கிறார்கள். அது வள்ளலாரோடு ஓர் ஒப்பாய்வு. இன்னுஞ் சிறிது ஆராய் வோமாயின், வள்ளலார் கருத்துக்களை மகாவர்த்தமானர், புத்தர், திருவள்ளுவர், திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள், மணிவாசகப் பெருந்தகை, தாயுமானவர் என்னும் முன்னைப் பெரிய அருளாளர்களோடும், காந்தியடிகள், பாரதியார் ஆகிய அண்மைப் பெரியவர்கள் இருவரோடும் கருத்துவகையால் ஒப்புமை செய்த அடிகளார், சேக்கிழார் பெருமானோடும் ஒப்பிட்டுக்காட்டுகிறார்கள். இந்த பெருமைமிகு நூலை சிவாலயம் வெளியிட்டுள்ளது.
By: உரையாசிரியர்: பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
By: உரையாசிரியர் : களத்தூர் வேதகிரி முதலியார்
By: சைவத்தமிழ்ச் செம்மல் தமிழவேள் சிவாலயம் ஜெ.மோகன்
By: மொழிபெயர்ப்பும், உரையும் : திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம்