By: திருமந்திரத் திலகம் முனைவர் மா.கி.இரமணன்
ஓங்கு புகழ் ஒற்றியூர்
ஆசிரியர்: திருமந்திரத் திலகம் முனைவர் மா.கி.இரமணன்
பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ. மோகன்
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்பது ஔவையாரின் வாக்கு. "கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" எனவும் அவர் கூறி இருக்கிறார். நாடும் வீடும் வளம் பெற நமது கோயில்களை தேடிச் சென்று தரிசித்து பூசித்து மகிழ வேண்டும் என குறிப்பிடுகிறார் திருமூலர். கோயிலைத் தேடிச் சென்று வழிபட்டால் இறைவன் நம் நெஞ்சத்தில் குடியிருப்பான் என கூறுகிறது திருமந்திரம். அழகுகூட்டி மகிழ்விக்கும் ஆயக்கலைகள் அறுபத்து நான்கிற்கும் உறைவிடம் கோயில்கள். தமிழகக் கோயில்களை பல்கலைக்கழகங்கள் எனலாம். இந்த நூல் கண்ணுக்கும் கருத்துக்கும் ஆன்மாவிற்கும் மிகுந்த ஆனந்தத்தை வழங்கக்கூடிய திருவொற்றியூர் ஆலயத்தின் சிறப்பை குறிப்பிடுகிறது. "ஆதிபுரி" என அழைக்கப்படக்கூடிய உலகில் முதலில் தோன்றிய இக்கோயிலின் பெருமையை பறைசாற்றும் "ஓங்கு புகழ் ஒற்றியூர்" என்ற நூலினை சிவாலயம் பதிப்பித்து உள்ளது.
By: இலால்குடி பா. எழில்செல்வன்
By: உரையாசிரியர் : மறைமலையடிகள்
By: பேராசிரியர் சாமி தியாகராஜன்
By: விபுலானந்த அடிகளார்