By: உரையாசிரியர்: பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய
வடிவுடை மாணிக்க மாலை
உரையாசிரியர்: பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ. மோகன்
அருளாளர்களாகிய திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசகர் திருமூலர் போன்று திருமுறை சான்றோர் வரிசையில் அவதரித்தவர்கள் நம் திருவருட்பிரகாச வள்ளலார். இவர் சென்னையில் வசித்து வருகையில் தினமும் திருவொற்றியூர் வடிவுடைய அன்னை உடனுறை மாணிக்கத் தியாகர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வமயம் அருள்மிகு வடிவுடையன்னை மீது "வடிவுடை மாணிக்க மாலை" என்னும் அருந்தமிழ் பாமாலையை பாடி தொடுத்தார். தாம் பாடிய திருவருட்பா ஆறு திருமுறைகளில் ஒன்றாகிய இந்த வடிவுடைய மாணிக்க மாலையில் பக்தி சுவையும், அம்பிகையிடம் தனக்குள்ள உரிமையையும், தனக்குக் கிடைத்த அனுபவத்தையும் தெய்வத் தமிழில் பாடி உருகினார். அருந்தமிழ் செய்யுட்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த மாலையை தமிழாகரர் மா.வயித்தியலிங்கனார் அவர்களைக் கொண்டு "சிவாலயம்" உரைமாலையாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. அம்பிகையின் அருளையும் வள்ளலாரின் தமிழையும் அறிய இந்நூல் உதவும்.
By: தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை
By: தி.சுப்ரமணிய தேசிகர்
By: உரையாசிரியர்: பேராசிரியர் மாசிலாமணி வயித்தியலிங்கன்
By: திருக்குறள் பீடம் தவத்திரு அழகரடிகள்