By: நூலாசிரியர்: மறைமலை அடிகளார் உரையாசிரியர்: அழகரடிகள்
திருவொற்றி முருகர்
மும்மணிக் கோவை
நூலாசிரியர்: மறைமலை
அடிகளார்
உரையாசிரியர்: அழகரடிகள்
பதிப்பாசிரியர்: சிவாலயம்
ஜெ. மோகன்
தனித்தமிழ் அறிஞர், தமிழ் கடல் என்று போற்றப்படும் மறைமலை அடிகளார் தமிழ்
கடலின் ஆழம் கண்டு அறிவு முத்தெடுத்தவர். அவர் அருளிச் செய்த மாலைகளில் ஒன்று
"திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை". அடிகள் 15 வயது முதல் 21 வயது வரை சங்க இலக்கியம், நிகண்டுகள்,
திருவாசகம், கோவை, தொல்காப்பியம், திருக்குறள்,
நாலடியார் முதலிய பல்வேறு
நூல்களை நெட்டுருச் செய்தவர்.
இருபத்தொரு வயதில் ஏற்பட்ட வயிற்றுப் பிணியால் ஒற்றியூரில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுள் முன்பு வேண்டி விண்ணப்பித்த பாடல்களே இத்திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை. இந்நூலினை அடிகளார் தம் 23ஆம் அகவையில் வெளியிட்டார். இந்நூலின் சிறப்பு அடிகளாரிடம் தமிழ் பயின்ற அழகரடிகளாகிய இளவழகனாரால் உரைசெய்யப்பட்டது. மூல நூல் ஆசிரியர் நூலுக்கு மாணாக்கரே உரைசெய்து வெளிவந்த சிறப்பு இந்நூலிற்கு மட்டுமே உண்டு. அதனுடன் ஆசிரியரால் பார்வையிடப் பெற்றுத் திருத்தமும் பெற்ற நூல் இது ஒன்றே! அத்தகு சிறப்பு வாய்ந்த இந்நூலினை 'அறிஞர்களின் ஞானச் செல்வங்களை ஆவணப்படுத்தும்' வகையில் சிவாலயம் இதனை செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.
By: கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம்
By: உரையாசிரியர்: கிருஷ்ணாம்பேட்டை கி.குப்புசாமி முதலியார்
By: உரையாசிரியர் : களத்தூர் வேதகிரி முதலியார்
By: உரையாசிரியர்: தமிழாகரர் பேராசிரியர் மாசிலாமணி வயித்தியலிங்கன்