By: உரையாசிரியர்: பேராசிரியர் மாசிலாமணி வயித்தியலிங்கன்
விண்ணப்பக் கலிவெண்பா
உரையாசிரியர்: பேராசிரியர் மாசிலாமணி வயித்தியலிங்கன்
பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ. மோகன்
விண்ணப்பக் கலிவெண்பா தேவாரப் பாடல்கள் பெற்ற திருத்தலங்கள் 275-ம் ஒரு செய்யுளில் தொகுத்துப் பாடும் நூல். இலக்கியச் சுவையை பத்திச் சுவையோடு கலந்து படைக்கும் நூல். சைவ சித்தாந்த ஆராய்ச்சியை தேக்க நிலை அடையாமல் வளர்ச்சி நிலையில் கொண்டு சென்றவர் வள்ளல் பெருமான். விண்ணப்பக் கலிவெண்பாவில் மக்கள் செய்யும் பாவங்களை தான் செய்தவையாகவே வள்ளலார் சொல்கிறார். இறைவனிடம் அவற்றை பொறுத்தருள வேண்டும் எனவும் வேண்டுகிறார். அவ்வழியில் பிறர் பழியும் தம்பழி போல் நாணும் பெரும் கருணை விளக்கமாக இந்த கலிவெண்பா விளங்குகிறது. வள்ளல் பெருமான் அருளிய இந்த நூலை மா.வயித்தியலிங்கன் பதம் பிரித்து தெளிவான எளிய உரையோடு தந்திருக்கிறார்கள். நூலை அற்புதமாக பதிப்பித்து வெளிக்கொண்டு வந்துள்ளது சிவாலயம்.
By: ஸ்ரீ கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ அமுர்தலிங்கத் தம்பிரான்
By: உரையாசிரியர்: பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
By: திருமந்திரத் திலகம் முனைவர் மா.கி.இரமணன்
By: உரையாசிரியர்: சூ.சுப்பராயநாயகர்