By: இலால்குடி பா. எழில்செல்வன்
தமிழ்ச் சமய சான்றோர்
தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை
ஆசிரியர்: இலால்குடி பா. எழில்செல்வன்
பதிப்பாசிரியர்: சிவாலயம்
ஜெ. மோகன்
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற
அப்பர் பெருமானின் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய பெருந்தகை தணிகை மணி வ.சு.
செங்கல்வராய பிள்ளை. இவர் தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியை சமய இலக்கிய
பணிகளுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். பல்கலைக்கழகம் கூட செய்ய முடியாத பெரும்
பணியை தனி ஒருவராக செய்து முடித்தவர். 40-க்கும் மேற்பட்ட நூல்களை
செங்கல்வராய பிள்ளை அவர்கள் எழுதி இருக்கிறார்கள். திருமுறைகளுக்கு ஒளிநெறி தந்த
பெரும் நெறியாளர். பிள்ளையவர்களின் பிறப்பு முதல் இறைவன் திருவடியை அடைந்த நாள்
வரை அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களையும்,
அவர் எழுதிய நூல்களில்
காணப்படும் நுட்பங்களையும் இந்நூல் எட்டு தலைப்புகளாக வகுத்து பேசுகிறது. இந்நூலை
சிவாலயம் வெளியிட்டுள்ளது.
By: -
By: பேராசிரியர் சாமி தியாகராஜன்
By: சிவாலய பதிப்புகள்
By: சிவாலய பதிப்புகள்