By: உரையாசிரியர்: கிருஷ்ணாம்பேட்டை கி.குப்புசாமி முதலியார்
திருக்குறள் விளக்கம் - திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
விளக்க உரையாசிரியர்: கிருஷ்ணாம்பேட்டை கி.குப்புசாமி முதலியார்
பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ.மோகன்
நம் எண்ணங்களுக்கு மட்டும் உட்பட்டு உலகின் கருத்து பொருள் முழுவதையும் உள்ளடக்கிய தனி பெருமை கொண்ட நூல் திருக்குறள். இந்நூலில் வெளிப்படும் நேர்பொருட்களை மட்டும் இன்றி திருவள்ளுவ நாயனார் மிக நுட்பமாய் வெளிப்படுத்தும் உண்மைகளையும் இனம் கண்டு உரை செய்தவர் பரிமேலழகர் ஒருவரே. குறளுக்குள் அவர் செய்த நுண் ஆய்வு மிகவும் ஆச்சரியமானது என பேரறிஞர்கள் வியக்கின்றனர். நம் புலன்களுக்கு உட்படுபவையான காட்சிப் பொருட்களை மட்டுமே அறியவல்ல சகலருக்கும் உரையாசிரியரின் கருத்து பொருள் எளிய முறையில் விளங்க கிருஷ்ணாம்பேட்டை குப்புசாமி முதலியார் அவர்கள் ஆசிரியர் மாணவர்களுக்கு விளக்கும் விதமாக விளக்க உரை எழுதிய அருளியுள்ளார்கள். இவ்வுரை நூலானது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மற்றும் அறத்துப்பால் தொகுப்புரை என நான்கு பகுதிகளாக வெளிவந்தது. அறத்துப்பாலும் அதன் தொகுப்புரையும் 1924-ஆம் ஆண்டு மற்றும் பொருட்பாலும், காமத்துப்பாலும் 1926-ஆம் ஆண்டு முறையே வெளியிடப்பட்டது. 2017-ஆம் ஆண்டு இந்த விளக்க உரையை சிவாலயம் வெளியிட்டது. இந்தப் பெருஞ்சிறப்பு வாய்ந்த உரைநூலை கால வெள்ளத்தில் நம் தமிழ் உலகம் இழந்து விடாத வண்ணம் போற்றி பதிப்பித்து வெளியிட்டது சிவாலயம்.
By: கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம்
By: தவத்திரு ஊரன் அடிகள்
By: உரையாசிரியர்: கோ.வடிவேலு செட்டியார்
By: நூலாசிரியர்: மறைமலை அடிகளார் உரையாசிரியர்: அழகரடிகள்