...

பெரியபுராணம்

By: உரையாசிரியர்: சூ.சுப்பராயநாயகர்

2,800
Available Stock: 10

பெரியபுராணம்

உரையாசிரியர்: சூ.சுப்பராயநாயகர்.

பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ. மோகன்

தெய்வச் சேக்கிழார் அருளிச் செய்த திருத்தொண்டர் புராணம் என்னும் நூல் அருள் நூலாகும்; அற நூலாகும்; வரலாற்று நூலாகும்; பூகோளப் புண்ணிய நூலாகும். தர்க்க நூலாகும்; அரசியல் நெறி காட்டும் நுண்ணிய நூலாகும்; இல்லறக் கடமைகளை உணர்த்தும் இன்பமூட்டும் நூலாகும்; துறவு நெறி காட்டும் தூய நூலாகும்; வீடுபேற்றை அடையத் தூண்டும் விழுமிய நூலாகும். இங்ஙனமான பன்முகப்பட்ட நூலை அருளிய தெய்வச் சேக்கிழார் சமூகக் கடமை உணர்ந்த சமய நெறியாளர். இவர்தாம் அருளாளர்களின் வரலாற்றை விவரிக்கத் தக்கவர் என்று இறைவனே தெரிந்து எடுத்துள்ளார் என்றுணர்தல் வேண்டும். பண்பாட்டுத் தடையம் மாறாப் பக்குவ நூல் பெரியபுராணம் இத்தகு சிறப்புமிக்க திருத்தொண்டர் புராணத்திற்கு 1893இல் வெளிவந்த உரை நூல், இன்று 125 ஆண்டு மூப்புடன் வெளியிடுவதாகிறது. இவ்வுரை நூலை எழுதியவர் அன்பர் சுப்பராய நாயகர் ஆவார். திரு. நாயகரின் உரை பொழிப்புரையாகும். பெரும்பாலும் செய்யுள் கிடந்தவாறே பொருள் சொல்கின்றார். பாடலில் காணப்படும் எந்தச் சொல்லையும் விட்டுவிடாமல் பொருள் சொல்வது பாராட்டுக்குரியது. சில இடங்களில் சொற்களைக் கொண்டு கூட்டியும் மாட்டெறிந்தும் பொருள் சொல்வதைக் காணமுடிகிறது.திரு.நாயகரின் உரை பண்டிதர் உரையன்று ; சாதாரணமாகத் தமிழ் படித்தோரும் சேக்கிழாரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தால் எளிய சொற்களையே பயன்படுத்துகிறார்.சேக்கிழார் சுவாமிகள் புராணத்திற்கும், திருமுறை கண்ட புராணத்திற்கும், திருத்தொண்டர் புராண சாரத்திற்கும் திரு. நாயகர் எழுதியுள்ள உரை படிப்போர்க்கு மிகுந்த பயனைத் தருகிறது.

Related products

...
திருமயிலைத் தலபுராணம்
Price: Rs. 270

By: ஸ்ரீ கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ அமுர்தலிங்கத் தம்பிரான்

...
ஓங்கு புகழ் ஒற்றியூர்
Price: Rs. 120

By: திருமந்திரத் திலகம் முனைவர் மா.கி.இரமணன்

...
திருக்குறள் அனுபவ உரை
Price: Rs. 600

By: கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம்

...
இசைத் தமிழ்த் தடத்தில் தெய்வச் சேக்கிழார்
Price: Rs. 400

By: முனைவர் சண்முக. செல்வகணபதி