By: உரையாசிரியர் : மறைமலையடிகள்
திருவாசக விரிவுரை
உரையாசிரியர் : மறைமலையடிகள்
பதிப்பாசிரியர் : சிவாலயம் ஜெ. மோகன்
திருவாசக நூலுக்கு பழைய உரைகள் ஒன்று இரண்டு இருந்தன. பழைய உரை என்ற பெயரிலேயே அவை வழங்கப்பட்டும் வந்தன. திருவாசகம் போன்ற பெரு நூலுக்கு உரை வரைவோர் முதலில் தான் தகுதியும் திறமையும் பெற்று இருக்கிறோமா என்று தம்மைத்தான் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அடிகளார் இரண்டிலும் தம் ஆற்றலைத் தான் உணர்ந்தவர். திருவாசகத்தை எழுத்தெண்ணி படித்தவர். அதற்கு முழுதும் உரை காண வேண்டும் என்ற பெரும் விருப்பத்தின் அடையாளமாக அமைந்தது தான் நான்கு அகவல்களுக்கும் அவர் உரை வரைந்தது. இலக்கியச் சுவை, பக்தி உணர்வு, தத்துவ நெறி, வாழும் நெறி இவைகளை ஊட்டுவதாக இந்த உரை அமைந்துள்ளது. வரும் தலைமுறைகள் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக இந்நூல் அமையும். இந்நூலை சிவாலயம் வெளியிட்டு பெருமை கொண்டது.
By: திருமதி ரேகா மணி
By: சைவத்தமிழ்ச் செம்மல் தமிழவேள் சிவாலயம் ஜெ.மோகன்
By: முனைவர் சண்முக. செல்வகணபதி
By: மொழிபெயர்ப்பும், உரையும் : திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம்