By: உரையாசிரியர் : சரவணப் பெருமாள் ஐயர்
திருக்குறள் மூலமும்
சரவணப் பெருமாளையருரையும்
பதிப்பாசிரியர்: சிவாலயம்
ஜெ. மோகன்
காலந்தோறும் புத்துரைகளையும் புதுமைக் கருத்து விளக்கங்களையும் காணும் ஒப்பற்ற நூல் திருக்குறள். திருக்குறளுக்கு பின் தோன்றிய பல இலக்கியங்களும் திருக்குறளை மேற்கோள்களாகக் காட்டி பல அறிய விளக்கங்களைத் தந்துள்ளன. திருக்குறளுக்கு பல உரையாசிரியர்கள் உரை எழுதி இருக்கின்றனர். அவற்றுள் பரிமேலழகரின் உரை அனைவருக்கும் புலமை விருந்து நல்கும் பான்மையுடையது. பரிமேழகர் உரையைத் தழுவிச் செய்யப்பட்ட பல உரைகளில் ஒன்று சரவணப் பெருமாளையர் உரை. திருவள்ளுவமாலைக்கும் இவர் உரையே முதன்முதலில் எழுந்த உரையாகும். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பரிமேலழகர் உரையின் விளக்கங்களை எளிமைப்படுத்தி இவர் உரைத்திருக்கிறார். 1847-ம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் கிடைப்பதற்கு அரியதாய் இருந்தது. ஆகவே பழம்பொருள் ஒன்று போற்றல் புதுப்பொருள் பல ஆக்குதலின் மேலானது என்னும் கொள்கைப் படி, "திருக்குறள் மூலமும் சரவணப் பெருமாளையருரையும்" என்கின்ற இந்த நூலை சிவாலயம் பதிப்பித்து மகிழ்ந்தது.
By: சைவத்தமிழ்ச் செம்மல் தமிழவேள் சிவாலயம் ஜெ.மோகன்
By: கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம்
By: முனைவர் சண்முக. செல்வகணபதி
By: பேராசிரியர் சாமி தியாகராஜன்