By: திருக்குறள் பீடம் தவத்திரு அழகரடிகள்
திருக்குறள் அறம்
ஆசிரியர்: திருக்குறள்
பீடம் தவத்திரு அழகரடிகள்
பதிப்பாசிரியர்: சிவாலயம்
ஜெ. மோகன்
பழந்தமிழ் சான்றோர்கள் அறம் என்பதை வாழ்க்கை நெறியாகக்
கொண்டு வாழ்ந்தனர். ஒழுக்க நெறிகளின் தொகுப்பே அறம் என கொள்ளலாம். தொல்காப்பியர்
காலம் தொட்டு அறம், பொருள், இன்பம் என்று மூவகை பொருட்பாகுபாடும் நிகழ்ந்ததைப்
பழந்தமிழ் இலக்கணங்களும் இலக்கியங்களும் எடுத்துரைக்கின்றன. திருவள்ளுவர்
திருக்குறளிலும் மூன்று பாகுபாட்டினை பின்பற்றியே குறள் நூலை அமைத்தார்.
திருக்குறளுக்கென எழுந்த ஆய்வு நூல்களில் குறிப்பிடத்தக்க ஒரு நூல் தவத்திரு
அழகரடிகள் எழுதிய திருக்குறள் அறம் என்னும் ஆய்வு நூலாகும். திருக்குறளில் உள்ள
அறத்துப்பாலில் உள்ள ஒவ்வொரு திருக்குறளையும் நுட்பமாக ஆராய்கிறது இந்நூல். 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்நூலுக்கு உயிரூட்டி
உள்ளார் சிவாலயம் ஜெ.மோகன் அவர்கள்.
By: இலால்குடி பா. எழில்செல்வன்
By: ஸ்ரீ கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ அமுர்தலிங்கத் தம்பிரான்
By: சைவத்தமிழ்ச் செம்மல் தமிழவேள் சிவாலயம் ஜெ.மோகன்
By: முனைவர் சண்முக. செல்வகணபதி