By: ஸ்ரீ கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ அமுர்தலிங்கத் தம்பிரான்
திருமயிலைத் தலபுராணம்
ஆசிரியர்: ஸ்ரீ கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ அமுர்தலிங்கத் தம்பிரான்
பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ. மோகன்
தமிழ்நாட்டுக் கோயில்களின் வரலாற்றில் புராணங்கள் தனியிடம் பெற்றுள்ளன. தொன்மயிலை மயிலாப்பூரின் நடுவில் அம்பிகை மயிலாகத் தோன்றி பூசித்த திருமயிலை கபாலிச்சரம் என்னும் கபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தையும் இதை சுற்றி அமைந்த மயிலாப்பூரின் தெய்வீகச் சிறப்புகளையும் கற்பனை வளத்துடனும் சொற்சுவையும் பொருட்சுவையும் நிரம்பி விளங்க எழுதப்பட்ட நூல் திருமயிலைத் தலபுராணமாகும். மயிலைத் தலபுராணத்தை அருளிச்செய்தவர் குன்றக்குடி ஆதீனம் என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்த அமுர்தலிங்கத் தம்பிரான் ஆவார். இவர் திருமயிலையில் இருந்த கட்டளை மடத்தில் தங்கி இருந்தவர். கபாலீசப் பெருமானிடம் பேரன்பு கொண்டவர். திருமயிலையின் மீது கொண்டிருந்த பக்தியால் மயிலாப்பூரின் ஆலய வரலாற்றை திருமயிலைத் தலபுராணம் என்னும் அரிய நூலாக செய்துள்ளார்கள். ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பாக இற்றிய இவ் வரியநூலினை மீள்பதிப்பாக சிவாலயம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. திருமயிலையின் வரலாற்றை அறிய இந்நூல் பெரிதும் உதவும்.
By: உரையாசிரியர்: சூ.சுப்பராயநாயகர்
By: திருமதி ரேகா மணி
By: முனைவர் சண்முக. செல்வகணபதி
By: கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம்