...

திருவருட்பா ஆறு திருமுறைகளுக்கான வரலாறும் ஆராய்ச்சிக் குறிப்புகளும்

By: சைவத்தமிழ்ச் செம்மல் தமிழவேள் சிவாலயம் ஜெ.மோகன்

60
Available Stock: 10

 திருவருட்பா ஆறு திருமுறைகளுக்கான வரலாறும் ஆராய்ச்சிக் குறிப்புகளும்

 தொகுத்து எழுதிப் பதிப்பித்தவர்: சைவத்தமிழ்ச் செம்மல் தமிழவேள் சிவாலயம் ஜெ.மோகன்

              இறைவனது திருவருள் இன்பத்தைக் கொடுக்கும் நூல்களே திருவுடைய நூல்கள் ஆகும். அத்தகைய சிறப்புப் பெற்ற அருள் நூல்களுள் திருவருட்பாவும் ஒன்றாகும். திருவருட்பா ஆறு திருமுறைகளாய் வகுக்கப்பட்டுள்ளது. சுமார் 6000 பாடல்களை உள்ளடக்கியதாய் உள்ளது. வள்ளலார் தம் ஒன்பதாவது வயதில் பாடத் தொடங்கி ஐம்பதாவது வயது வரை பாடிக் கொண்டே இருந்தார். சதாசர்வ காலமும் பரமனை பாடுவதையே பணியாய் கொண்டிருந்த பெருமான், எத்துணை ஆயிரம் பாடல்களை பாடினாரோ? யார் அறிவார். அவர் பாடல்களைத் தொகுத்து வெளியிட அன்பர்கள் விரும்பிய போது வள்ளலார் அதற்கு இணங்க மறுத்தார். அதனால் அழிந்து ஒழிந்துப் போன கவிதைகள் ஏராளம் இருக்கலாம். அவற்றுள் காற்றோடு கலந்தவை போக ஏட்டில் ஏறியவை 6000 பாடல்கள். ஒரு நூலை வெற்றறிவால் ஆராய்ந்து எழுதுவதைக் காட்டிலும், பதிப்பதைக் காட்டிலும் தவத்தால், மனத்தூயராய், இறையுணர்வும் அருளும் பெற்று எழுதுதலே சீரிய முறை என குறிப்பிடுவார் சிவஞான சுவாமிகள். அந்த வகையில் இறைவழிபாட்டு முறையில் தனிவழி கண்டவரும், அனைத்துலக ஒருமைப்பாட்டை நெஞ்சிலேற்றிச் சமுதாயச் சீர்த்திருத்தம் நாடியவரும், சீர்த்திருத்தச் சைவ வழி கண்டவருமான வள்ளல் பெருமானின் பாடல்கள் முழுவதும் இதுவரை வெளிவந்துள்ள பதிப்புகளில் கூறப் பெறாத பல செய்திகளும் இந்நூலில் முதன்முதலாக கூறப்பட்டுள்ளன. பல்வேறு பதிப்புகளை மையமாக வைத்து வெளியிடப்பட்டுள்ள இப்பதிப்பு அனைவரின் ஐயங்களையும் போக்கக் கூடிய அற்புதப் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. வரலாற்று பதிப்புக்கு உள்ள சிறப்பு அம்சங்கள் அனைத்தும் தாங்கி வெளிவந்துள்ள, "திருவருட்பா ஆறு திருமுறைகளுக்கான வரலாறும் ஆராய்ச்சிக் குறிப்புகளும்" எனும் நூலை சிவாலயம் பதிப்பித்து பெருமை சேர்த்துள்ளது.

Related products

...
பெரியபுராணம்
Price: Rs. 2,800

By: உரையாசிரியர்: சூ.சுப்பராயநாயகர்

...
ஓங்கு புகழ் ஒற்றியூர்
Price: Rs. 120

By: திருமந்திரத் திலகம் முனைவர் மா.கி.இரமணன்

...
திருவாசக விரிவுரை
Price: Rs. 280

By: உரையாசிரியர் : மறைமலையடிகள்

...
தமிழ்ச் சமய சான்றோர் தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை
Price: Rs. 190

By: இலால்குடி பா. எழில்செல்வன்