By: விபுலானந்த அடிகளார்
யாழ் நூல்
ஆசிரியர்: விபுலானந்த அடிகளார்
பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ. மோகன்
உலகத்துச் செம்மொழிகள் எவற்றிற்கும் இல்லாத் தொன்மை, இலக்கிய இலக்கண வளம், வரலாறு, கலைகள், தொழில், வாணிகம் முதலியவற்றில் ஊன்றிய குடிகளைப் பெற்ற சிறப்புடையது தமிழ் மொழி. இவற்றிற்கு மேலாக இம்மொழி படைத்த நிமிர்ந்த ஞானச் செருக்கும் அதனை வெளிப்படுத்தும் அற்புதமான பத்தி இலக்கிய பரப்பும் ஏனைய மொழிகளுக்கு இல்லை. இவ்விலக்கிய பரப்பின் உள்ளேயும் குறிப்பாக, இசை வரலாறு. அதன் தொன்மை சிறப்பு, இசை இலக்கணம் கூறும் நூற்பதிவுகள் ஏராளம். அந்த வழியே 'பாணர் கை வழி' என்னும் 'யாழ் நூல்' குறிப்பிடத்தக்கது.யாழ் நூல் பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரிபியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற ஏழு இயல்களைக் கொண்டு அமைந்துள்ளது.யாழ் நூலின் முகவுரையில் சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதை யினுள்ளே யாழ் குறித்த 25 அடிகளின் விரிவுரையாக இந்நூல் அமைந்தது என்று விபுலாநந்த அடிகளாரே கூறியுள்ள போதும். இசை நரம்பியல். தேவாரவியல், இசைக்கணிதம், குடுமியான் மலைக் கல்வெட்டுச் செய்திகள், ஆயிரம் நரம்பு யாழ் போன்ற இசையுடன் தொடர்புடைய வேற்றுச் செய்திகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
By: முனைவர் சண்முக. செல்வகணபதி
By: கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம்
By: சைவத்தமிழ்ச் செம்மல் தமிழவேள் சிவாலயம் ஜெ.மோகன்
By: பேராசிரியர் சாமி தியாகராஜன்