By: முனைவர் சண்முக. செல்வகணபதி
இந்நூல் திருமுறையில்
பயிலப்பெறும் பண்முறை மற்றும் யாப்பு முறையைத் தெளிவுபடுத்துவதோடு, அதன் அடிப்படையில் சேக்கிழார் பயணித்தமையும் நன்கு
விளக்கப்பட்டுள்ளது. பன்னிரு பகுதிகளைக் கொண்ட இந்நூல் பன்னிரண்டாம் திருமுறையாம்
திருத்தொண்டர் புராணத்தில் இசைத்தமிழ் நுட்பத்தை ஆய்ந்துகாட்டி சிறப்பித்துள்ளது. இயல்கள்
தோறும் முடிவுகள் தொகுத்துத் தருவது பயில்வோருக்குப் பெரும் பயன் தரவுள்ளது.
மேலும் திருத்தொண்டர் புராண யாப்பியல் அட்டவணை இணைப்பு, நூலாசிரியரின் ஆய்வு அனுபவத்தைக் காட்டுகிறது.
தெய்வச் சேக்கிழாரின் இசைக் கலைச் சொற்களின் ஆட்சிகளால்
தொன்மை இசைத் தமிழ் மரபின் தொடர்ச்சியையும் வளத்தையும் இந்நூலாசிரியரைத் தொடர்ந்து
எதிர் வரும் தலைமுறை இந்நூலினை ஆவணமாக கொண்டு பயன்கொள்ள நம் ஆசிரியப் பெருந்தகை
இந்நூலில் படைத்துள்ளார்கள். தமிழிசைத் தொடர்பான ஆய்வு செய்பவர்களுக்கு இந்நூல் மிகுந்த
பயன்பெறும் பயன் தரக்கூடியதாகும் இதனை சிவாலயம் வெளியீட்டுள்ளது.
By: சிவாலய பதிப்புகள்
By: இலால்குடி பா. எழில்செல்வன்
By: சிவாலய பதிப்புகள்
By: சிவாலய பதிப்புகள்