...

சிவாலய தேவார ஒளிநெறி மற்றும் கட்டுரைகள்

By: தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை

17,230
Available Stock: 50

சிவாலய தேவார ஒளிநெறி மற்றும் கட்டுரைகள்

ஆசிரியர்: தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை

பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ.மோகன்

ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்லுக்குப் பொருள் தரவல்லது அகராதி (Dictionary) ஆகும். ஒரு சொல்லுக்கு உள்ள பல பொருள்களையும், பல பொருள்கள் அடங்கிய ஒரு சொல்லையும் ஒப்பு நோக்குவதற்கு களஞ்சியங்கள் தோன்றின. இதனை ஆங்கிலத்தில் Thesaurus என்று அழைப்பர். இவை சொல்லுக்குரிய வேர்ச் சொற்களைக் குறித்தும் ஆராயும் விதமாக அமைகிறது.

இவ் ஒளிநெறியும் சொற்களஞ்சிய வகை நூலே அன்றி அகராதி அல்ல. தேவாரத்தில் இருந்து ஏதாவது ஒரு சொல் அல்லது பொருளைச் சொன்னாலும் அந்த சொல்லும் அதன் பொருளும் எப் பதிகத்தில் என்ன உள்ளது என்பது நிரல் படுத்தி, ஒப்புமைப்பகுதியின் கீழ் இன்ன பொருளடங்கிய தொடர் இன்ன இன்ன நூல்களில் உள்ளது என்பதையும், நூலில் காணப்படும் இலக்கண நுட்பங்களையும் இன் நூலில் விளக்கப்படுகின்றன. ஒருபொருள் ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புக்களில் வருமேயானால் உரிய தலைப்புக்கள் எல்லாவற்றினும் அது குறிக்கப்பட்டுள்ளது. ஒளிநெறியிலுள்ள தலைப்பிற்கண்ட சொற்களும் பொருள்களும் முறைப்படுத்திக் கட்டுரையாக விளக்கி எழுதப்பட்டிருக்கின்றன. ஒளிநெறி போன்ற ஒரு நூல் தமிழில் தேவார ஒளிநெறிக்கு முன்னும் இன்றளவும் இயற்றப்படவில்லை. இத்தகைய அரும்பெரும் நூலை சிவாலயம் 15 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.

Related products

...
சேக்கிழார் வழியில் அன்புசெய் அடியார்கள்
Price: Rs. 550

By: திருமதி ரேகா மணி

...
TIRUVACHAKAM
Price: Rs. 600

By: Translation: Thiruvachakamani K.M. BALASUBRAMANIAM

...
விண்ணப்பக் கலிவெண்பா
Price: Rs. 270

By: உரையாசிரியர்: பேராசிரியர் மாசிலாமணி வயித்தியலிங்கன்

...
தமிழ்ச் சமய சான்றோர் தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை
Price: Rs. 190

By: இலால்குடி பா. எழில்செல்வன்